14வது ஆண்டு திருச்செந்தூர் தைப்பூசம் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னம் பாலிப்புவிழா - 2024

செந்திலாண்டவர் அருளால்
ஆண்டுதோறும் அனைவருடைய உதவியுடனும், ஒத்துழைப்புடனும், நடைபெறுகின்ற அன்னதானம் இந்த வருடம் 24.01.2024. புதன்கிழமை காலை 6மணி முதல் இரவு 8 மணிவரை  திருநெல்வேலி,ஶ்ரீவைகுண்டம், குரும்பூர் வழியாக செல்லும் பாதயாத்திரை   பக்தர்களுக்கு அன்னம்பாலிப்பு, மற்றும், மருத்துவ முதல் உதவிகள், மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அங்கமங்கலத்தில் குரும்பூர்மெயின் ரோடு அங்கமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் பந்தல் அமைத்து காலையிலிருந்து இரவு வரை  பக்தபெருமக்கள்அமர்ந்து உணவு உண்டு ஆசீர்வதித்து செல்வார்கள்.

பக்தபெருமக்கள்  மெய்யன்பர்கள், தங்கள்  குடும்பத்தனரோடு நேரில் கலந்து கொண்டு, இறைவன் அருள் பெற
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

 

 

வேலுண்டு வினையில்லை!
மயிலுண்டு பயமில்லை! முருகா சரணம்...