திருச்செந்தூர் முருகன் ஆலய வரலாறு

தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள சுனாமியை வென்ற திருச்செந்தூர் கோவில் ஒரு கட்டிடக்கலை அதிசயம்! சுப்ரமண்யசுவாமி
    3000 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆலயம்.  கடற்கரை பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் கட்டிடங்கள் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடை அமைத்து தான் அமைப்பார்கள்.  ஆனால் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கடல் அருகில் சுமார் 67மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.  137அடி உயரமுள்ள திருக்கோவில் இராஜகோபுரம்.  கடற்கரையிலிருந்து 140மீ திருக்கோவிலின் கருவறை தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும், தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது என தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை, சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுகிறது.


நோய் தீர்க்கும் இலை விபூதி:-
    இத்திருக்கோவில் பன்னீர் இலை விபூதி பிரசாதம் மிக விசேசமானது.  மார்பில் பூசிக்கொள்ள சந்தனதுடன் பிரசாதமாக விபூதியை வழங்குவார்கள்.  தீராத நோய் தீர்க்கும் அருமருந்து இலை விபூதி.  முருகனுக்கு 6 கரங்கள் என்று இருப்பக்கத்துக்கும் மொத்தம் 12 கரங்கள்.  பன்னீர் மரத்தின் இலையில் 12 நரம்புகள் உள்ளன.  பன்னீர்; இலையானது நேராக பார்த்தால் வேல் போல் காட்சியளிக்கும்.  வேதங்களே பன்னீர் இலைகள் என்பது ஐதீகம் அனைத்து வியாதிகளும் இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதத்தால் மறைந்துவிடும் என்கிறது.  சுப்பிரமண்ய புஜங்கம்.  இத்தலத்தில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளதால் இவ்விடத்திற்கு வீரபாகுபட்டினம் என்ற ஒரு பெயருமுண்டு, வீரபாகுதேவருக்கு பூஜை நடத்தப்பட்டு மூலவருக்கு பூஜை நடத்துவது இயல்பு.


    மூலவருக்கு பின்புறம் பஞ்சலிங்கங்களைக் காணலாம்;.  இந்த அறைக்கு பாம்பறை என்ற பெயருமுண்டு.  இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது.  குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.  இத்தலத்தில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கபெருமாள் என நான்கு உற்சவர்கள்.  இவர்களில் குமரவிடங்க பெருமாள் மாப்பிள்ளை சுவாமி என அழைக்கப்படுகிறார்.  அருணகிரிநாதர் திருப்புகழ்பாடி உள்ளார்.  பக்திசரத்தையுடன் பாடினால் பாவங்கள் விலகும் என்று ஐதீகம்.  இத்திருக்கோவில் வடிவம் பிரணவ மந்திரமாக ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.  நாழிக்கிணறு 24 அடி ஆழத்திலிருந்து இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்!.


    இத்திருக்கோவில் திருப்பணிக்காக மௌனசாமி, காசிநாதசுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள்.  அவர்களது சமாதிகள் நாழிக்கிணறு அருகே பின்புறம் உள்ளது.


    நாகரிகங்கள் முதலில் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.  இத்திருத்தலம் கடலில் கரையோரத்தில் அலைகள் தழுவ அமைந்திப்பதால் அலைவாய் என்று அழைக்கப்படுகிறது.  திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருச்சீர் அலைவாய் என அழைக்கப்படுகிறது.  முருகப்பெருமானின் அவதார நோக்கமே! அசுரர்களை அழிப்பது தான்!.  திருச்செந்தூரில் நோக்கம் பூர்;த்தியானது.  எனவே தெய்வீகசிறப்பும் தனித்துவமும் கொண்ட ஸ்தலம் மிகப்பெரிய ஸ்தலம்.


    மூலவர் தவக்கோலத்தில் இருப்பதால் காரம், புளி பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை.  இரவு பூஜையின் போது, பால், சுக்குவெந்நீர் நிவேதனம் செய்வர்.  ஆவணி மற்றும் மாசித்திருவிழாக்களின் போது முருகப்பெருமான் சிவன், வி~;னு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.


யோகம், போகம், வேகம் என மூவகை வடிவங்களைக் கொண்டு அருள்பவர் முருகப்பெருமான் திருச்செந்தூரில் ஒரு தின உபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.  தமிழ்கடவுள் முருகனை தரிசிப்Nhர் நீங்காத செல்வங்களை பெற்று வாழ்ந்திடுவார்.  வாழ்க மெய் அன்பர்கள் வளர்க முருகன் புகழ்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!


    முருகன் கங்கையால் தாங்கப்பட்டான் அதனால் காங்கேயன், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால், கார்த்திகேயன் என்றும் சக்தி தெய்வத்தால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் முருகன் வழிபாடு ~ண்மதம் என்று சொல்லப்படுகிறது.  தமிழ்கடவுள் முருகன் வழிபாடு தமிழர்களை பொறுத்தவரை தை மாதம் சிறப்பு மிக்க மாதமாக கூறப்படுகிறது.  அகிலம் தோன்றிய நாளாக கூறப்படும் பூசம்-நட்சத்திரமும்-பௌர்னமியும் சேர்ந்த அற்புதமான தினம் தைப்பூசம் திருநாள்.  இத்திருவிழா முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் பக்தர்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வேலுண்டு வினையில்லை!
மயிலுண்டு பயமில்லை! முருகா சரணம்...