ஸ்ரீ கார்த்திகேயன் பாதயாதத்திரை பக்தர் சேவா அறக்கட்டளை

நம் மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களையும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் கொண்டிருந்தால் நம் மனம் சிறந்து விளங்கும். எதிர்கால திட்டங்களையும், வளர்ச்சிகளையும் கருத்தில் கொண்டு பிறருக்கு உதவும் எண்ணத்துடன் இறைவழிபாட்டுடனும், இறைத் தொண்டு செய்து நல்ல விசயங்களில் கவனம் செலுத்தி பாதயாத்திரை பக்தர்களுக்கு நலன் சார்ந்து அனைத்து உதவிகள் புரிந்து வளர்ச்சி பயணத்தில் இறைவன் அருளால் முன்னேறுவது நமது அறக்கட்டளையின் கடமையாகும்.

அறக்கட்டளையின் நோக்கம்:
பாத யாத்திரை பக்தர்களின் நலன் சார்ந்து தன்னார்வ அமைப்பாக அனைத்து உதவிகளையும் வழங்குதல்

  1. ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில், திருச்செந்தூர் தைப்பூசம் திருவிழா     முன்னிட்டு தைப்பூசத்திற்கு முந்தையநாள் பாதயாத்திரையாக     செல்லுகின்ற பக்தர்களுக்கு, குரும்பூர், அங்கமங்கலம் பகுதியில்     மருத்துவ முதல் உதவியுடன் அன்னதானம்     வழங்குதல்.
  2. பாத யாத்திரை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய பூஜை மற்றும் இதர     விசயங்களை அவர்களுக்கு எடுத்துகூறுதல்.
  3. பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக செல்லவும், சாலை விதிகளை     கடைபிடிக்கவும், விபத்துக்களை தவிர்க்கவும், தேவையான     ஆலோசனைகள் அறிவுரைகள் வழங்குதல்.
  4. ஒவ்வொரு ஆண்டும் முருகனை வழிபடுவதால் ஏற்படும் பயன்களையும்,     நன்மைகளையும் எடுத்துக்கூறுதல்.  
  5. பக்திபாடல்கள், முருகனின் அருட்செயல்கள் பற்றிய விளக்கங்கள்     அடங்கிய புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்தல் போன்றவை.

    நமது திருநெல்வேலி கார்த்திகேயன் பாதயாத்திரை குழுவானது கடந்த  14 ஆண்டுகளாக பாதயாத்திரை பக்தர்களுக்கு சேவைபுரிந்து வருகிறது.  கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அன்னதானப் பணியும், மருத்துவ முதல் உதவி சேவைகளும் செய்து வருகிறோம்.  கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நமது குழுவின் சேவையானது நமது அரசாங்கத்தின் கீழ் ஒரு தன்னார்வ அமைப்பாக பதிவு செய்யப்பட்டு ஸ்ரீகார்த்திகேயன்பக்தர்சேவா அறக்கட்டளையாக செயல்பட்டு வருகிறது.


    நமது சேவைகள் ஆண்டுதோறும் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குரும்பூர், அங்கமங்கலம் கிராமத்தின் ஸ்ரீநரசிம்மர், தனது தங்கையான ஸ்ரீஅன்னபூரணியுடன், மானிட ரூபத்தில் சாந்தமாக வீற்றிருக்கும் ஆலயம்      ஸ்ரீ அன்னபுரணி சமேத ஸ்ரீநரசிம்ம சாஸ்தா திருக்கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவில். தினசரி பிரம்மமுகூர்த்த வேளை பூஜை நடைபெறுகிறது.  இத்தலத்தில் இலுப்பை மரம் தலவிருட்சமாக அமைந்துள்ளது.  நாம் தைப்பூசத்திற்கு முந்தைய நாள் இத்திருத்தலம் சென்று அன்று மாலை முதல் பக்தர்களுக்கு தேனீர் வழங்குதல், அத்திருக்கோவில் அன்னம் தயாரித்து அதிகாலை பிரம்மமுகூர்த்த வேளையில் அடியார்கள் அனைவருடன் பூஜை செய்து குரும்பூர் மெயின்ரோடு, பஞ்சாயத்து அலுவலகம் அருகில் பந்தல் அமைத்து காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மூன்று வேளையும் சுமார் பத்தாயிரம் பாதயாத்திரை பக்;தர்களுக்கு அவர்கள் அமர்ந்து உணவு உண்ணுவதற்கும் மருத்துவ முதல் உதவியுடன் அன்னம்பாலிப்பு திருப்பணிகள் செய்து வருகிறோம்.  இந்த ஆண்டு விகாரி வருடம் தை மாதம் 24ஆம் நாள் (பிப்ரவரி 07 ஆம் தேதி 2020ம் ஆண்டு வெள்ளிக்கிழமை, இறைவன் அருளால் பக்தர்கள் அனைவரின் உதவியுடனும் ஒத்துழைப்புடனும் சிறப்பாக நடைபெற உள்ளது.


    மெய்அன்பர்கள், பக்தர்கள், இந்த நிலையான பேரின்பத்தில் பங்கு கொண்டு இயன்ற காணிக்கைகளையும், பொருள் உதவிகளையும் தந்து உதவுமாறு கேட்டுக் கொண்டு தாங்கள் தங்களது குடும்பத்துடன் ஆன்மீக திருப்பணிகள் செய்து முருகன் அருள்பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.


    நல்ல விசயங்களில் கவனம் கொண்டு, நல்ல எண்ணங்களையும், ஆக்கபூர்வமான சிந்தனைகளையும், கொண்டு பிறருக்கு உதவும் எண்ணத்துடன் இறை வழிhட்டுடனும், இறைத் தொண்டு செய்திட நீங்களும் எங்கள் ஸ்ரீகார்த்திகேயன் பக்தர் சேவா அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றிட நிரந்தர-ஆயுட்காலஉறுப்பினராக உங்கள் குடும்ப உறுப்பினர்களை அனைவர்களையும் இப்பேரின்பத்தில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.  ஆண்டு தோறும் நமது திருப்பணிக்கு மருத்துவ சேவைகள் செய்து வரும் மருத்துவருத்துவர்கள், அன்னதானம் நடைபெறும் இடம் அளிக்கும் மெய்யன்பர்கள், மற்றும் நமது திருப்பணிக்கு உறுதுணையாக இருந்து வரும் - உழவாரப்பணிக்குழுக்கள் மற்றும் அங்கமங்கலம் திருக்கோவில் பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள், நன்கொடைகள் மற்றும் பொருள்கள் வழங்குதல் பக்தர்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் முருகப்பெருமானின் புரண அருளும், சௌபாக்கியமும் கிடைக்க அறக்கட்டளைசார்பில் சிரம்தாழ்த்தி வேண்டுகிறோம்.


    எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் தாங்கள் சகல செல்வங்களும் நிரம்ப பெற்று நீடு இனிது வாழ பிரார்த்திக்கின்றோம். தொண்டர்கள், அடியார்கள், பக்தர்கள், அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்ரீகார்த்திகேயன் பாதயாத்திரை பக்தர் சேவா அறக்கட்டளை
திருநெல்வேலி – 2. பதிவு எண்: 83/2018.

Bank Details:

SRI KARTHIKEYAN BAGTHAR SEVA ARAKKATALAI

BANK NAME – CANARA BANK, PALAYAMKOTTAI

A/C NO – 1114101064526

IFSC Code No: CNRB0001114

Office Cell No: 98435 – 60082.

வேலுண்டு வினையில்லை!
மயிலுண்டு பயமில்லை! முருகா சரணம்...