நாம் அன்னம்பாலிப்பு சேவைபுரிகின்ற ஊரில் நமது அறக்கட்டளை பெயரில் சொநதமாக இடம் அமைந்து வருடம்தோறும் ஆயுட்காலம் முழுவதும் பாதயாத்திரையாக திருச்செந்தூர் வருகின்ற பக்தர்களின் நலன் சார்ந்து தன்னார்வ அமைப்பாக அனைத்து உதவிகளையும் வழங்குவது.
சிந்திப்பதற்கு :
நம்முடைய மனம் ஒரு நிலம் போன்றது. நல்ல எண்ணங்களையும், ஆக்கபூர்வமான சிந்தனைகளையும், வளர்ச்சிகளையும் கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு உதவும் எண்ணத்துடன் இறைவழிபாட்டுடனும் இறைத்தொண்டு செய்து நல்ல செயல்களில் கவனம் செலுத்தி நமது அறக்கட்டளை வளர்ச்சி பயணத்தில் முன்னேற்றுவது நமது கடமையாகும். நமது ஸ்ரீகார்த்திகேயன் பக்தர் சேவா அறக்கட்டளையின் எதிர்கால திட்டமான சொந்த நிலம் மற்றும் கட்டிடங்களில் பாதயாத்திரை பக்தர்களின் அனைத்து நலன் சார்ந்து நமது சேவைகள் ஆயுட்காலம் முழுவதும் நமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் உதவியுடனும் ஒத்துழைப்புடனும் உறுப்பினர் சேர்த்தல் நிரந்தர ஆயுட்கால உறுப்பினர்களாக இணைந்து சேவை புரிய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
ஒவ்வொரு ஆண்டு பாதயாத்திரையாக பக்தர்கள் செல்லும் வழிகளில் செந்தூர் வரை குடிதண்ணீர் அமைப்பது, மருத்துவ சேவைகள் புரிவது என்பன முக்கிய சேவையாக உள்ளது.
3. உறுப்பினர்கள் விபரங்கள் :
நமது அறக்கட்டளையில் ஆண்டுதோறும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
1) நிர்வாகக்குழு உறுப்பினர்
2) செயற்குழு உறுப்பினர்
3) பொதுக்குழு உறுப்பினர்கள்
என உறுப்பினர்கள் சேர்ந்து ஆண்டுதோறும் பணிபுரிந்து வருகிறார்கள்.
4. செய்திகள் :
நமது அறக்கட்டளையின் ஆயுள் உறுப்பினராக சேர்வதற்கு படிவம் ஏற்பாடு செய்து உள்ளோம். ஒருவருக்கு ரூ.1000/- வீதம் ஆயுள் சந்தாவாக நிர்ணயம் செய்து வங்கி கணக்கில் நிரந்தர வைப்பு தொகையாக வைக்கப்படும். வருங்காலங்களில் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள், பாதயாத்திரை பக்தர்களின் நலன் சார்ந்து தன்னார்வ அமைப்பாக, குடிநீர் வசதி, கட்டிடங்கள், கழிப்பறை வசதிகள் செய்தல் போன்ற சேவைகளை செய்ய முடிவு செய்துள்ளோம்.
5. அறக்கட்டளையின் நோக்கம் :
ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு தைப்பூசத்திற்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு குரும்பூர், அங்கமங்கலம் பகுதியில், மருத்துவ முதல்உதவியுடன் அன்னதானம் வழங்குதல்.
பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக செல்லவும் சாலை விதிகளை கடைபிடிக்கவும், விபத்துக்களை தவிர்க்கவும் தேவையான ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்குவதோடு, பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய பூஜை மற்றும் இதர விஷயங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறுதல்.