திருச்செந்தூரில் திருவிழாக்களில் முக்கியமானதான கந்தசஷ்டி திருவிழா உள்ளது. சூரசம்கார நிகழ்வானது செந்தூரில் நடைபெற்றது என்பது வரலாறு. கடந்த கால வரலாற்றில் 1977ஆம் ஆண்டு திருச்செந்தூரில் சூரசம்கார நிகழ்ச்சியானது நடக்கும் அதே நாளில் வங்கக்கடலில் ஒரு பெரும்புயல் உருவாகி அந்தபுயல் தூத்துக்குடி, திருச்செந்தூர் இடையே கரையை கடக்கும் எனவும், ஆகவே செந்தூரில் வழக்கமாக மாலையில் நடக்கும் சூரசம்கார நிகழ்ச்சியானது காலையில் நடப்பதற்கு ஏற்பாடுகள் செய்வதாக நிர்வாகம் வானெர்லி மற்றும்; செய்தித்தாள்கள் மூலம் மக்கள் அறிய பெற்றனர். மாறாக ஒரு போதும் நடக்கக்கூடாது என மக்கள் முருகப்பெருமானிடம் வேண்டிக் கொண்டனர்.
முருகன் அருளை கலியுகம் அறிய வேண்டும் என வேண்டினார்கள். அந்தப் புயலானது திசைமாறி இலங்கையில் கதிர்காம மலையில் அடிபட்டு ஆந்திராவில் கடந்ததை மக்கள் அறிந்தார்கள். அவ்வாரே, முருகப்பெருமானின் அருட்செயல்களையும், திருச்செந்தூரின் சிறப்பையும் உணர்ந்து திருநெல்வேலியில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது என முடிவு செய்து இறைவனை கால்நடையாக சென்று வழிபட்டனர். காலப்போக்கில் உலகில் மனிதநேயம் தழைக்க ஏராளமான பக்தர்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிவித்து, விரதம் இருந்து, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் இராஜபாளையம், சங்கரன்கோவில் , செங்கோட்டை, தென்காசி, பாபநாசம், திருநெல்வேலி போன்ற பல ஊர்களில் மக்கள் குடும்பமாக பாதயாத்திரையாக சென்று இறைவனை வழிபட தொடங்கினார்கள்.
அன்னதானம் - மகிமை:
உலகத்தில் பிறக்கின்ற மனிதர்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ விரும்புகின்றனர். அவர்கள் வாழ்விற்கு பல சிறந்த வழிகளை பல்வேற மதங்கள் போதித்தாலும், எல்லா மதங்களும் ஏகமனதாக ஏற்றுக் கொள்கின்ற ஒருவழி அன்னதானம் செய்தல்.
அன்னம் தானம் செய்வதால், மனநிம்மதி, தொழில் முன்னேற்றம், உடல் ஆரோக்கியம், அனைத்தும் இறைவன் அருளால் கிடைக்கும். யாதொரு மனிதனும் படுகின்ற துன்பங்களை, அறிந்தும், அறியாமலும் செய்கின்ற தவறுகளே கர்மா என்று இந்து தர்மம் கூறுகின்றது.
இறைவனை காண வேண்டும் என்றால் அருள் வேண்டும். அந்த அருளே அன்பு, மற்றும் பண்பு. ஒவ்;வொரு மனிதனும் எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல்; பார்க்கும் உணர்வு கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். அதுவே இன்பத்திற்கான சாதனமாகும் என்கிறார் வள்ளலார் சுவாமிகள்.
படமாடக் கோயில்பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே!
- திருமூலர்
விளக்கம்:-
கோவிலில் இறைவனுக்கு நாம் செய்யும் சிறப்பு அடியார்களுக்கு வந்து சேராது. ஆனால் அடியார்களுக்கும், மக்களுக்கும் நாம் செய்யும் தொண்டு இறைவனைச் சென்றடையும் என்கிறார் திருமூலர் சுவாமிகள்.
பக்தர்களுக்கு அன்னம் வழங்குவதும், திருவிழாக்களை தரிசிப்பதும் தான் மனிதனாக பிறந்தவர்கள் பெறக்கூடிய பயனாகும்.
ஆயிரம் யானை, குதிரைகளைப் பரிசாக கொடுத்தாலும், கோடி பசுக்களை தானம் செய்தாலும், எத்தனை தங்கம், வெள்ளி பாத்திரங்களை இனமாக கொடுத்தாலும், கடல்வரை உள்ள பரந்த பூமியைத் தானமாக அளித்தாலும் நமது குலத்தின் சேவைகளை அர்ப்பணித்தாலும், ஏன் கோடி கன்னிகளுக்கு விவாஹம் செய்து வைத்தாலும் அத்தனை எண்ணற்ற தானங்களும் அன்னதானத்திற்கு ஈடாகாது”.
இருப்பது பொய் போவது மெய் இதை எண்ணிப் பார்த்திப்பே
இருக்கும் வாழ்வில் அன்னதானம் தம் கடனாய் செய்திடவே
இருப்பு அதுவாம் தெய்வநிலை தன் நிழலில் இருக்க வைத்து
இவை பேற்றில் திளைக்க வைத்து பிறவிப்பேற்றை அளித்திடுமே!